ஶ்ரீ அத்தனூர் ஆயி, செல்லக்குமாரசாமி, குப்பண சாமி சரித்திரம்
ஸ்ரீ செல்லக்குமாரசாமி சரித்திரம்: செல்லகுமாரசாமியானவர் முருகரின் அவதாரம் ஆவார். பார்வதி தேவிக்குச் சிவபெருமான் பிரணவ மந்திரமான ஓங்காரத்தின் பொருளைச் சொல்லும் பொருட்டு குழந்தையான முருகனை விட்டுவிட்டுத் தன் அருகில் வந்து உபதேசம் பெறுவதற்கு அழைத்தார். அப்போது முருகப்பெருமான் வண்டு வடிவமெடுத்து பார்வதி சிவனிடம் உபதேசம் பெரும்போது அதனைப் பார்வதியின் கூந்தலில் மறைந்து இருந்து ஒட்டுக்கேட்டார். அதை கண்டு கோபமுற்ற சிவபெருமான் முருகனை பூலோகத்தில் பிறக்குமாறு சாபமிட்டார். வாழவந்தி நாட்டு ( http://kongupattakarars.blogspot.com/2011/03/10.html?m=1 ) மோகனூர் நாட்டாரான மணிய கோத்திரத்தார், கொங்கதேசத்தில் மூன்றாம் நாடான காங்கயநாட்டில் ( http://kongupattakarars.blogspot.com/2011/03/3.html?m=1 ) முத்தூரில் காணியாட்சி பெற்று வாழ்ந்து வந்தனர். காணியாளரான கங்கை குலம் மணிய கோத்திரத்து செல்லப்பகவுண்டர் உடலில் சாபத்தின்படி முருகபெருமான் வந்திறங்கி பத்து மாதங்கள் கருவுற்றுச் செல்வம் ஓங்கி பிறந்ததால் செல்வக்குமாரர் என்று மகனுக்கு பெயரிட்டு வளர்த்தார். ஆறு சாஸ்திரம் பதினெண் புராணங்கள...